Saturday, October 17, 2009

கூண்டுக்கிளி






கீற்று.காமில் 20௦/10/2009 , வெளியான என் கவிதை: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=864:2009-10-19-06-46-18&catid=2:poems&Itemid=88 . நன்றி www .keetru .com.




சொல்வதைச்
சொல்லும் கிளி என்றதும்
எல்லோரும்
ஏதேதோ கூற
அதுவும்
திருப்பிக் கூறிக்கொண்டிருந்தது
பைத்தியமாய்...

என் திருப்பம் வர
அருகில் சென்றேன்
சக்கரநாற்காலியை நகர்த்திக்கொண்டே...
அழுகை வர
கிளியும்
அழ ஆரம்பித்திருந்தது!!


--செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

2 comments:

  1. சிறகில்லா இவனுக்கும், சிறகிருந்தும் பறந்து திரிய முடியாத கூண்டுக் கிளிக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை. இவனைப் பார்க்கும் விழிகளில் பரிதாபம், கிளியைப் பார்க்கும் பார்வைகளோ வியப்பில்..சார்ந்தே வாழ நேர்ந்து விட்ட கொடூரம், இருவருக்குமே...

    இருந்தாலும் நகர்ந்து செல்வதற்கென, சக்கர நாற்காலியாவது கிடைக்கப் பெற்ற இவனை விட, கிளியின் நிலை அதிகம் சபிக்கப் பட்டதாய்.....

    \\அழுகை வர
    கிளியும்
    அழ ஆரம்பித்திருந்தது!!\\

    உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கின்றன இவ்வரிகள். வார்த்தைகள் இல்லை...பாராட்ட...

    ReplyDelete
  2. Please remove my image above from your page. This Pastel bird drawing is mine and has been taken without my permission from my RebBubble website.
    If you wish to buy a copy of this drawing you can do so from: http://orlacahill.redbubble.com/sets/50645/works/2847160-2-bird-in-a-cage
    otherwise please remove this drawing from your Blog now.

    ReplyDelete

Reactions