Saturday, November 7, 2009

அவனுக்காய்...

கீற்று.காமில் பிரசுரிக்கப்பட்ட என் கவிதை : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1145:2009-11-08-12-17-25&catid=2:poems&Itemid=88 நன்றி www .keetru .com.



ஏக வலி
ஏக விருப்பங்கள்
ஏக கோரிக்கைகளுடன்
நுழைந்தேன்...
பிரார்த்தனைக் கூடம்!

குழைந்த மாமிசத்தில்
எலும்பை சொருகியதாய் அருகிலொருவன்
நிற்கவும் அமரவும் முடியாமல்
பிரார்த்தித்துக் கொண்டு..

ஏதும் வேண்டாமடா எனக்கு
கொடு இவனுக்கென்று ஏதேனும்
கடிந்து கூறி வந்தேன்
கடவுளிடம்..

-- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Sunday, November 1, 2009

நினைத்தலும் மறத்தலும்

கீற்று.காமில்: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1078:2009-11-02-00-40-17&catid=2:poems&Itemid=88. நன்றி www .keetru .com.











ஆறு வயதிருக்கும் அவளுக்கு
அடிக்கும்
தாளத்தை
நடனப்படுத்திக்கொண்டிருந்தாள்
கயிற்றில்

இறங்கட்டும் கேட்போமென்று
சாப்பிட்டாயா
உன்னிடம் எத்தனை
பாவாடை சட்டை உள்ளது
படிக்க போகலியா?
என கேள்விகளும்...
மிட்டாய்க்கென்று
சில்லறையும் சேர்த்து வைத்தேன்...

பேருந்து வந்திருந்தது...

காட்சிகள்
விரிந்தும்
அந்தப் பெண்
சுருங்கியும்...

எனக்கான நிறுத்தம் வருவதற்குள்
சற்று தூங்கியும் போயிருந்தேன்.


-- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி