Cliffnabird
Wednesday, June 17, 2009
உறுத்தல்
உறுத்தலும்
வலியும்
காலமாகிப் போன
கணவனின் முகமும்
தீண்டலின் தீவிரமும்
தீயாய் எரித்துக் கொண்டிருந்த
அவளை...
புணர்ச்சியின் முடிவில்
இவன் தரும்
பணத்தால்
பிள்ளைக்கு வாங்கும்
பால் அணைத்துக் கொண்டிருந்தது!
-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
Wednesday, June 3, 2009
ரயிலில்...
அசிங்கமாய் தான் பட்டிருக்கும்
அவளுக்கு என் பார்வை
உணர்ந்து பார்த்த என் விழிகளை
உற்று நோக்கி விட்டாள்
பயணம் நீடித்த பல மணி நேரமும்
பார்த்து கொண்டேதானிருந்தேன்
வேறெங்கும் இடமிருந்திருப்பின்
மாறி அமர்ந்திருக்கக் கூடுமவள்
பொறுக்கி என்றவள் நினைத்தது
பொருத்தமாய்த தான் இருந்திருக்கும் அவ்வேளையில்;
இறுதி வரை சொல்லவில்லை
இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று
செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)