Wednesday, June 3, 2009

ரயிலில்...


அசிங்கமாய் தான் பட்டிருக்கும்
அவளுக்கு என் பார்வை

உணர்ந்து பார்த்த என் விழிகளை
உற்று நோக்கி விட்டாள்

பயணம் நீடித்த பல மணி நேரமும்
பார்த்து கொண்டேதானிருந்தேன்

வேறெங்கும் இடமிருந்திருப்பின்
மாறி அமர்ந்திருக்கக் கூடுமவள்

பொறுக்கி என்றவள் நினைத்தது
பொருத்தமாய்த தான் இருந்திருக்கும் அவ்வேளையில்;


இறுதி வரை சொல்லவில்லை
இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று

செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

3 comments:

  1. சும்மாவே உன்னோட பார்வை வில்லங்கமா தான் இருக்கும். அதுவும் ஒரு பொண்ணை உத்து உத்து முறைச்சு பாத்தா சொல்லவே வேணாம். பொறுக்கின்னு தான் நினைச்சிருப்பா. நான் அந்த கம்பார்ட்மென்ட் ல இருந்திருந்தா, தர்ம அடி வாங்கி குடுத்திருப்பேன்.

    \\இறுதி வரை சொல்லவில்லை
    இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று\\

    சொல்லிருக்கலாம். ஆனா சொல்லி இருந்தா இந்த கவிதை கிடைச்சிருக்காது.

    கடைசி இரண்டு வரிகளில் உன்னதம் பெறும் இந்தக் கவிதை, நழுவி விட்ட அந்தக் கணத்தை மீட்டெடுக்கிறது. அருமை.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.

    ReplyDelete

Reactions