Tuesday, February 1, 2011

என் மஜ்ஜைகளின் சுவை

கீற்று.காம் இல் பிரசுரிக்கப்பட்டது. கீற்றுவில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


நன்றி கீற்று.காம்


ஒவ்வொன்றாய்..
ஒவ்வொன்றாய்
வந்தன அந்த விலங்குகள்..

இவைகள் எங்கிருந்து
எவன் எழுதிய விதிப்படி
என்னை என்ன செய்யவிருக்கின்றன
என்று தெளிவதற்குள் ..
கூர் நகங்களால் கொத்தி
புழுதியில் புரட்டி
என் தசைகளின் நார்களைப் பிளந்து
தின்க ஆரம்பித்திருந்தன..

என் சாவை
என் கண்களால்
பார்க்கமுடிந்திருந்தது..
என் தசைகளை
என் நரம்புகளை
என் எலும்பின் நுனிகளில்
அப்பியிருந்த ஜவ்வுகளை
எலும்பினுள்ளிருந்த மாவையென
அவைகள் ஒன்றுவிடாமல்
சுவைத்துத் தின்றபோது..

சற்றே தலைக்கிறக்கம் ஆரம்பித்திருந்தது

இன்னும் தின்றன
இன்னும் தின்றன
காற்று மண்டலத்தில்
கவுச்சி ஏற ஏற
இன்னும் சுவைத்து
இன்னும் சுவைத்து

அவைகள் தின்னுவதை நிறுத்திவிட்டாலும்
நான் உயிர் பிழைக்கப்போவதில்லை
என்றுணர்ந்த வேளையில்..

அவைகளுடன் சேர்ந்து
நானும் ருசிக்க ஆரம்பித்திருந்தேன்
என் மஜ்ஜைகளின் சுவையை!


- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

4 comments:

  1. ஒவ்வொன்றாய்..
    ஒவ்வொன்றாய்
    வந்தன அந்த விலங்குகள்..

    எங்கிருந்தும் வரவில்லை...
    எவனும் விதி எழுதவில்லை...
    உன்னை ஒன்றும் செய்யாது
    குழம்பித் தெளியத் தேவை இல்லை

    புழுதியில் நீ புரண்டதும்
    தசைநார்கள் கிழிந்ததும்
    கூர்நகங்களால் அல்ல...

    உன் சாவை
    உன் கண்களால்
    பார்க்க முடிந்த போதே
    புரிந்திருக்க வேண்டும் உனக்கு

    தசையையும்
    நரம்பையும்
    எலும்பையும்
    எலும்பு நுனி மாவையும்
    சுவைத்து தின்றதும்
    அவையல்ல...

    காற்று மண்டலத்தில்
    கவுச்சி வாசனை
    அவைகளின் உடம்பிலிருந்தும்
    ஏறியிருக்கலாம்...

    தின்னுவதை நிறுத்தாது
    உயிரும் பிரியாது...

    ஒவ்வொன்றாய்..
    ஒவ்வொன்றாய்
    வந்தன அந்த விலங்குகள்...

    உன்னுள்ளிருந்தே...!

    hihihi :) :) :)

    ReplyDelete
  2. Thanks for your comments sundar! :)

    ReplyDelete
  3. kalapiran in Keetru:
    un kavithayin adarthiyil konjam munetram ullathu vaalthukkal

    ReplyDelete
  4. ஆத்மார்த்தி IN Keetru:
    nalla nadai.neenda vivaranai.vaazhthukkall.

    ReplyDelete

Reactions