பங்காளிகள் பறித்துக்கொண்ட
பூர்விக சொத்து போனாலென்ன வந்தாலென்ன
பையனை வக்கீலாக்கனும்
பட்டணம் எல்லாம் பொழப்புக்குத் தான்
பொடி காசு சேத்தாயினும்
ஊர்ல ஒரு குழி நிலம் வாங்கனும்
இருபது ரூபா சீட்டு போட்டு
இந்த முறையேனும்
இளையவளுக்கு பொங்கலுக்கு புதுசு எடுக்கனும்
மழைக்கு ஓடி ஒதுங்க வழியில்ல
மாசம் பொறந்ததும் வண்டிக்கு
தார்பாய் மாட்டனும்
சொருவு கீத்து போட்டுனாலும்
பருவமழை
அடுப்படில பெய்யாம பார்த்துகனும்
உருண்டு கொண்டிருந்த
கடலை வண்டியின்
ரோதையினூடே
உருண்டு கொண்டிருந்தது
உருட்டியவனின் உள்ளமும்
பொழுது சாய்கையில்
விடியும் இவனுலகம்
விரைவில் விடிய
ஒரு பொட்டலம் வாங்கிச் சென்றேன்
கடலை பிடிக்காத போதிலும் ...
-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி.
நல்ல கவிதையில் திருஷ்டியாக ஆங்காங்கே பல பிழைகள். தவிர்த்திருக்கலாம்.
ReplyDelete\\பொழுது சாய்கையில்
விடியும் இவனுலகம்
விரைவில் விடிய
ஒரு பொட்டலம் வாங்கிச் சென்றேன்
கடலை பிடிக்காத போதிலும் ...\\
நீங்கள் வாங்கிய அந்த ஒரு பொட்டலத்தில், விடிவு வந்து விடாதெனினும், காலத்தாற் செய்த சிறு உதவி. மனதை அசைக்கிறது - பிடிக்காத போதும் வாங்கிச் சென்றதில் வெளிப்படும் உங்கள் அன்பு.
தொடருங்கள் இப்படியான கவிதைகளை, பிழைகளைத் தவிர்த்து.
ok.. now can u write a 8 liner abt the current IPL fiasco?? It has to start with shashi tharoor/sunanda puchkar till lalit modi exit!!!
ReplyDeleteYou can make it 12 liner maxxxx... And the time limit is till 2nd MAY..
ping me after posting it!! (Am a demanding customer boss.. hehe)