Thursday, October 15, 2009

கையசைப்பு

திண்ணை.காமில் வெளியான என் கவிதை, http://www.thinnai.com/?module=displaystory&story_id=309101512&format=html. நன்றி திண்ணை.காம்.





ஏதோ
யோசித்தபடியே
கசக்கிக் கொண்டிருந்த
கண்களின் இடுக்குகளில்
வந்து மறைந்து போனது
தன் பிஞ்சு கைகளை
அழகாய் அசைக்கும்
குழந்தை.


ரயில் வேகத்திலும்
யாரோ ஒருவரின் பதில்
கையசைப்பின் நிகழ்தகவிலும்
மீண்டும் விளையாட
திரும்பி இருப்பான் என்பதுமான
குழப்ப வெளியினூடே
மறைந்து போனது
என் பதில் கையசைப்பின்மையின்
உறுத்தல்கள்!


--செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

4 comments:

  1. படித்தவுடன் எனக்கு வேறு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. காலேஜ் முடித்த சமயம், நண்பர்களுடன், வழக்கமாகக் கூடும் இடத்தில் (ரயில்வே ஸ்டேஷன் தான்) இருந்தேன். கிளம்பப் போகும் முஸ்தீபுகளுடன் இருந்த ரயிலில், எங்கள் பார்வைக்கெதிரே ஒரு பருவ மயில், எங்கள் பக்கமே பார்த்துக் கொண்டு. குஷி தாங்க முடியவில்லை, நம்மையும் ஒரு பருவப் பெண் நோட்டமிடுகிறாளே என்று. இன்னும் கொஞ்சம் நீடிக்காதா இன்று ஏக்கம் கொள்ளும்போதே கிளம்பி விட்டது ரயில். கொஞ்ச தூரம் நகர்ந்ததும், ஜன்னல் வழியே கையைக் கீழிறக்கி (கூட இருக்கும் பெற்றோருக்கோ, அல்லது உறவினருக்கோ தெரியாத வகையில்) டாடா காட்டியது அந்தச் சிட்டு. எங்களுக்குள் ஆரம்பித்தது சண்டை - அவள் யாரைப் பார்த்து கை அசைத்தாள் என்று.

    பதில் கை அசைப்பே செய்ய முடியாத அந்தச் சூழல் மனதில் அழியாமல் தேங்கி விட்டது.
    ஒரு மழலையின் கையசைப்பு, தங்கள் மனதை அசைத்தத்தில் ஆச்சரியம் ஏதுமில்லை.

    \\மீண்டும் விளையாட
    திரும்பி இருப்பான் என்பதுமான
    குழப்ப வெளியினூடே\\

    உறுத்தலுக்கு சப்பைக் கட்டு. சமீப காலமாக, இந்த "உறுத்தல்" என்ற பதம், உங்களைப் படுத்துகிறது போலும். அந்தப் படுத்தல் உங்களுக்கு எப்படி உள்ளதோ தெரியாது, ஆனால் எங்களுக்கு ஏகக் குஷி. பின்னே? இப்படி அருமையான கவிதைகள் தெறித்து விழுகின்றனவே.

    சிறப்பான இக்கவிதைக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. விவேக் நாராயண் சார், நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் பின்னூட்டங்கள், உற்சாகப்படுத்துகின்றன! வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Sundar annachi, yes i have also noticed, the word, URUTHTHAL, is influencing me a lot these days, like you said in one of your comments, the earth revolves carrying all such "uruthals"! after all Am still under earth's gravity .. isnt it ?

    ReplyDelete

Reactions