Saturday, October 10, 2009

சேரா துணை..

திண்ணை.காம் இல் வெளியான எனது கவிதை: http://www.thinnai.com/?module=displaystory&story_id=30910098&format=html நன்றி: http://www.thinnai.com/


முன்பு
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுதி விடுவேன்
ஒரு கவிதை

மழைக்கா
எனக்கா
என்று
புரியாத போதிலும்

மூன்று வரிகள்
முடிந்திருக்கையில்
அடித்து சாத்துகிறாள்
கதவை

மூன்று வரிகளில்
முடிகிறது
என் கவிதை

மழையின் சத்தம்
மட்டும் காதுகளுக்குள்ளே...

இப்போதும்
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுத முயல்கிறேன்
ஒரு கவிதை


--செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

3 comments:

  1. மி த பர்ஸ்ட்டு....

    நன்றாக உள்ளது.. சேரா துணை... சேர்ந்து விடாமல் இருக்கட்டும் - திருமணம் ஆகாத உங்களுக்கு..

    நல்ல துணை சேர்ந்து, இது போல நிகழாதிருக்க வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  2. படித்தவுடன் எனக்குள்ளும் மழையடிக்க ஆரம்பித்தவிட்டது.

    ReplyDelete
  3. திரு. செல்வா அவர்களே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

    உங்கள் "அவர்"ஐ நோக்கி ஆவலாய்...

    ReplyDelete

Reactions