Tuesday, May 25, 2010

அறுத்து விடுவார்கள்

கீற்று.காம் இல் பிரசுரிக்கப்பட்டது. கீற்றுவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=8264&Itemid=139

அறுத்து விடுவார்கள்.

நாளை காலை
இரண்டு மணி வாக்கில்
அதோ அந்த பெரிய
ரக்கட்டைகளின்
மையத்தில் வைத்து.

காலை கருக்கலில்
சில்லென்று நீர் அடித்து
மடி நசுக்கப்போவதில்லை இனி

அறுத்து விடுவார்கள்

அவர்களுக்கு வேண்டியதை
அளவுக்கு அதிகமாகவே
கொடுத்துவிட்டேன்

இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்
கன்றுக்கென்று;

சொல்லவும் இல்லை அவளிடம்

நான் இங்கு வருவதையும்

அவள் இங்கு வரப்போவதையும்..

அழுதுவிடுவாள் அவள்.

வண்டியில் ஏற்றுகையில்
ஏதோ மாட்டி
அறுபட்ட வலி
இருக்கப்போவதில்லை
நாளை காலை

அறுத்து விடுவார்கள்

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (
cliffnabird@gmail.com
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript இயலுமைப்படுத்த வேண்டும் )

1 comment:

  1. உணர்வுப்பூர்வமான வரிகளில் உள்ள உண்மை சுடுகிறது, இருப்பினும் மாமிசம் உண்பதை தவிர்க்க முடியவில்லை . . .

    ReplyDelete

Reactions