கீற்று.காம் இல் பிரசுரிக்கப்பட்டது. கீற்றுவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்:
http://www.keetru.com/index.php?option=com_aisection&id=8264&Itemid=139
விலாசம் இல்லாமல்
நீ எழுதிய
மழைத்துளி சிந்திய போதுதான்
முடிந்திருக்க வேண்டும்
என் வாழ்க்கை!
விழுந்து விரிந்த
துளியின்
வலப்புற முடிவில்
"எப்படியாவது வந்து கூட்டிப் போ"
எங்கென்று குழம்பிய
நாட்களை
நினைவு படுத்திக்கொண்டே
முகம் சுளிக்கிறேன் -
ஒளிந்து விளையாட
கூப்பிடும் மகனிடம்.
-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
Sundar's Comment in Keetru:
ReplyDeleteசுந்தர்:
மற்றுமொரு அற்புதப்படைப்பு.... செந்திலிடமிருந்து... \\மழைத்துளி சிந்திய போதுதான் முடிந்திருக்க வேண்டும் என் வாழ்க்கை!\\ மழைத்துளி அல்ல, அது கண்ணீர்த்துளியென்றே நான் கருதுகிறேன். \\விழுந்து விரிந்த துளியின் வலப்புற முடிவில்\\ கவிதை இங்கே ஒரு காணொளி போல் உருக்கொள்கிறது. விழுந்து விரியும் அந்தத் துளியை, பார்க்க முடிகிறது என்னால்... \\"எப்படியாவது வந்து கூட்டிப் போ"\\ சுய விலாசம் எழுதாமல், வந்து கூட்டிப்போ என்றால் எப்படிக் கூட்டிச் செல்வதாம்? எரிச்சல் மேலிடுகிறது.. கடிதம் எழுதிய அவள் பால்... \\முகம் சுளிக்கிறேன் - ஒளிந்து விளையாட கூப்பிடும் மகனிடம்.\\ நடந்து முடிந்த நிகழ்வின் நினைவு இது என்று புரியும்போது ஆசுவாசம் ஏற்பட்டாலும், காதலை / காதலியை, தொலைத்தவன், என் மனதில் ஏற்படுத்துவது தீராத வலியை... கடிதம் எழுதிவிட்டு, எப்படியாவது வந்து கூட்டிப்போவான் என்று எதிர்பார்த்து, ஏமாந்து போயிருக்கக்கூடுமவள். யதார்த்தம் புரிந்ததும், தேற்றிக்கொண்டு, தனக்கான வாழ்வை தேடிக்கொண்டிருக்கலாம். காதல் தோல்வியின் வலியை அறியாத என்னை, இவ்வளவு தூரம் பாதித்த செந்தில் மேல் நான் கோபமாயிருக்கிறேன். சுந்தர் ருவாண்டா
பா. சதீஸ் முத்து கோபால்.Comment in Keetru:
ReplyDeleteபா. சதீஸ் முத்து கோபால்.
அற்புதமான படைப்பு...... வாழ்த்துக்கள்....
.
Rajesh Comment in Keetru:
ReplyDeleteRajesh:
gd one.. took a while and support to understand! Gd wrk senthil and gd PR work Sundar!!