Sunday, November 2, 2008

ஈகை இம்சை




அலுவல் முடிந்து
அலுப்பில் திரும்பிய
அன்றொரு நாள்
இருளில் இடுக்கில் ஒருவன்
தானம் கேட்டான்
தளர்ந்த குரலில்

குனிந்து பார்த்த
குறைந்த வினாடியில்
உணர்ந்துகொண்டேன் அவன்
ஊணத்தை

கடவுள் கொடுப்பவனாய்
பறிப்பவனாய் பல தோற்றம்
பறிப்பவனாய் மட்டும்
இவன் வாழ்வில்


இருந்த ஒரு காலில் ஒரு செருப்பு
காலாய் மாறிய
இன்னொரு கையில்

கருப்பு செருப்பு
கையூண்றி இவன் நகர்கையில்
செருப்புடன் சேர்த்து தேய்த்தான்
என் இதயத்தையும்


தான தலைவனாகவோ
பாரி வள்ளலாகவோ எனை
பாவிக்காத நான்

சில்லறை தேடி
சில அடி நடந்து
சில்லறையுடன் திரும்புகையில்
காணவில்லை அந்த பாவியை


மறத்துப்போன மனதுடை பிணமாய் எண்ணி
மறந்துபோயிருப்பான் அவன் என்னை
மனதில் பதிந்த குற்ற உணர்வில்
மறக்கவில்லை அவனை நான்
கையில் சில்லறை உள்ள
மற்றொருநாள் பார்ப்பேனென்று ...

செ. செந்தில் கணேஷ்

4 comments:

  1. //சில்லறை தேடி
    சில அடி நடந்து
    சில்லறையுடன் திரும்புகையில்
    காணவில்லை அந்த பாவியை//
    இதற்காகத்தான் சொன்னார்கள். "வலக்கை அளிப்பதை இடக்கை அறியாவண்ணம்" என, அதாவது, வலக்கையில் இருந்து ஈகைப் பொருளை இடக்கைக்கு மாற்றும் அந்தக் கண நேரத்தில் மனம் மாறி விடுமாம்.
    எனக்கும் ஏற்பட்டதுண்டு இந்த அனுபவம்.
    சில நாட்கள் நான் இப்படியும் யோசித்ததுண்டு. ஈந்த உடன் ஏற்படும் நொடி நேர பெருமை தான் இத்தனை பிச்சைக்காரர்களை இன்னும் வாழ வைக்கிறதோ?
    Traffic Signal என்ற ஒரு ஹிந்தி படம் பார்த்தபிறகு இந்த பிச்சைக்காரர்களின் மீதான என் பார்வையே மாறிப்போனது. எவ்வளவு பெரிய நெட்வொர்க் அவர்களது, யாரெல்லாம் அதை சார்ந்துள்ளனர் என்று தெளிவாக அந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
    அதற்க்கு பிறகு, பிச்சை கேட்பவனைப் பார்த்தால் சாப்பிட எதாவது கொடுப்பது அல்லது பேசாமல் வந்து விடுவது என்று கொள்கையாகவே வைத்துக்கொண்டேன்.
    போன முறை ஊருக்கு போயிருந்த போது பேருந்து நிலையத்தில் ஒரு சிறுவன் பிச்சை கேட்டபோது, அவனை அருகில் இருந்த உணவகத்திற்கு அழைத்து சென்று, இரண்டு தோசைக்கான டோக்கன் வாங்கி கொடுத்து விட்டு மன திருப்தியோடு எனக்கான பேருந்தில் ஏறி அமர்ந்தேன் - வாங்கிய ராஜேஷ் குமார் நாவலை பிரித்து வாசிக்கத்தொடங்கியபோது பக்கத்தில், கீழிருந்து ஒரு குரல், "கேனப்பய த மாப்ள, பிச்சை கேட்டா ஒரு ரூபா ரெண்டு ரூபா கொடுத்துட்டு போவானா, அத விட்டுட்டு தோசை டோக்கன் வாங்கி தர்றான் லூசுப்பய. சரி இருவது ரூவா இருக்கு, சினிமா போலாமா இல்ல கராக்கு அடிப்பமா"
    (கராக்கு என்று அவர்கள் எதை குறிப்பிட்டார்கள் என்று தெரியவில்லை என்றாலும் ஒன்று தெளிவாக தெரிந்தது. நான் பேக்கு என்பது தான் அது)

    ReplyDelete
  2. சுந்தர் நீங்க சொல்றது சரிதான் நானும் சிறுவர்களையோ சிறுமிகளையோ பார்கையில் சில்லறை தருவதில்லை வேறு விதத்தில் உதவலாமா என்று யோசித்ததுண்டு, ஆனால் கால் கை இல்லாத ஒருவனை பார்க்கையில் நாம் அளிக்கும் சில்லறையே சிறந்தது என்றாகிவிடுகிறது.

    //சில நாட்கள் நான் இப்படியும் யோசித்ததுண்டு. ஈந்த உடன் ஏற்படும் நொடி நேர பெருமை தான் இத்தனை பிச்சைக்காரர்களை இன்னும் வாழ வைக்கிறதோ? //

    இருக்கலாம், இருந்தாலும் ஒரு மனிதனுக்கு எதோ ஒரு வகையில் uthavivittu சற்றே perumaiyadaivadhum தவறில்லை தானே?

    // "கேனப்பய த மாப்ள, பிச்சை கேட்டா ஒரு ரூபா ரெண்டு ரூபா கொடுத்துட்டு போவானா, அத விட்டுட்டு தோசை டோக்கன் வாங்கி தர்றான் லூசுப்பய. சரி இருவது ரூவா இருக்கு, சினிமா போலாமா இல்ல கராக்கு அடிப்பமா" //

    கேள்வியிலேயே பதில் உள்ளது. இருபது ரூபாயை முடிவிலி வகைகளில் செலவிட முடியும், நீங்கள் அளித்த இரு டோக்கன் எவ்வளவு மதிப்பு என்று தெரியவில்லை ஆனால் அவை அளித்த நிறைவு மேற்குறிய வற்றிலிருந்து முழுதும் வித்தியாசபடுகிறது.. ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தை இன்னும் நினைவில் தங்குகிறதே அதை தான் நாம் எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லை..?


    பின் குறிப்பு: டிராபிக் சிக்னல் இன்னும் நான் பார்க்கவில்லை...

    ReplyDelete
  3. கோடிகளும் லட்சங்களும் பிச்சையில் வந்தாலும் பிசினஸ்-ல் வந்தாலும் ஏதோ வகையில் நாம் பட்ட ஊனமும் அதற்கான இந்த சமூக ஏளனங்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத வலிகளை உடையது.

    பாத்திரமறிந்து ஈகையிட தெரியாதது வணங்காமுடியின் தவறு. கவிதையில் மேற்கூறிய மனிதன் கோடிகளை குவித்திருந்தாலும் ம்ஹூம் என்ன செய்ய...

    //கடவுள் கொடுப்பவனாய்
    பறிப்பவனாய் பல தோற்றம் //

    ReplyDelete
  4. really nice, I enjoyed and want to share mine too. but I don't know how to put my comments in Tamil, i will write about in my blog. Sundar we are always fooled or fooling others because this is muttaal ulagam.. Bala

    ReplyDelete

Reactions