Friday, November 7, 2008

மழையில் ஒரு நாள்...




முந்திக் கொண்டு
நான் நுழைந்ததும்
தலைக்கு மேல்
பற்றாத உன் கைகளுடன்
நீ வந்ததும்
முற்றிலும் எதார்த்தமே


ஓடு போட்டவன்
சாரத்தை சற்றே
இன்னும்
இறக்கி இருந்தால்
கால்கள் நனைந்திருக்காது
நம்இருவருக்கும்


தண்ணீர் சுவருக்கும்
சுவருக்கும் இடையில் நாம்


இங்கு எது பேசினாலும்
மழையை தவிர
யாருக்கும் கேட்க போவதில்லை

தனிபயிற்சி பெயர் காரணமோ என்னவோ
தனி தனியேதான் இருந்தோம் இதுவரையில்;
இன்றும் வழியில்
மழையில் சிக்கி இருக்கவில்லைஎனின்
பேசாமலே பிரிந்திருக்க கூடும் நாம்


வகுப்பில் என்னைவிட அறிவாய்
கேள்வி கேட்கிறாளே என்று
கவலை வந்ததுண்டு சிலசமயம்



மழை அதிகரிக்க அதிகரிக்க
மனதுக்குள் ஏக சாரல்
அவ்வளவு நேர மழையில்
நாம் பேசியதென்னவோ
துளியூண்டு தான்!


உன் தூரல் பேச்சுக்கள்
சற்றே அதிகமானபோது
மழை குறைந்துபோனது...

நின்றுவிட்ட மழையில்
நனைந்தும் குளிர்ந்தும் வீடு சென்றேன்!
செ.செந்தில் கணேஷ்

4 comments:

  1. ஞாபங்கங்கள் மழையாகும் ......
    மழையினால் ஆன ஞாபங்கங்கள் எப்போதும் அதே ஈரப்பதத்துடன் நம் மனதில் ஏதோ மூலையில் தங்கிவிடுகிகறது. மழை ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் மறக்க முடியாத ஞாபகங்களை விட்டு செல்கிறது .

    பூமிக்கு கீழே நரகமும் ஆகாயத்திற்கு மேலே சொர்க்கமும் இருப்பதாக சொல்லவில்லை என் நம்பிக்கை.இவை இரண்டும் நம்முடனே இந்த உலகில் இருப்பதாக எண்ணுகிறேன். நாம் இந்த உலகை பார்க்கும் முறையில் அவை அமைகிறது. பரந்து விரிந்த பச்சைப்புல்வெளிகள் ,பெய்யென பெய்யும் மழை.மழைக்கு முன்னால் அடிக்கும் சிலீரென்ற காற்று, சங்கிலித் தொடரான மலைகள் , குழ்ந்தையின் மழலை,பிரமிப்பூட்டும் இந்த ஆகாயம் என இந்த உலகமே சொர்க்கம் நிறைந்திருக்கிறது.

    தனி மனித வாழ்வின் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதமான ரசனைகளை கொண்டுள்ளது. அந்த ரசனைகளின் பாதிப்பே இப்படியான கவிதைகள். தலையால்
    தண்ணீர் குடித்தாலும் ஏனோ எனக்கெல்லாம் இந்த மாதிரி கவித்துவங்கள் எழுத வருவதில்லை. என்னின் ஒரு நண்பன்,அருமையாக ஓவியம் வரைவான் . எவ்ளோ முயற்சித்து ஒரு விநாயகர் படம் வரைந்தேன் .திடீரென விநாயகர்க்கு கோபம் வந்து தும்பிக்கையால் கடாசி விடுவரோ என பயந்து இது மாதிரியான விபரீத முயற்சிகளை விட்டு விட்டேன், இன்னொரு நண்பன் நன்றாக keyboard வாசிப்பான், ஏனோ பலமுறை நான் முயற்சித்தும் என்னால் பழைய ambassdor கார்-ன் ஹாரன் ஒலியை தவிர எதையும் கொண்டு வர முடியவில்லை.இவர்கள் தேவதைகளால் ஆசிர்வதிக்கபட்டவர்களா அல்லது நான் sabikkapattavanaa என தெரியவில்லை.

    // தண்ணீர் சுவருக்கும்
    சுவருக்கும் இடையில் நாம்//

    இந்த மாதிரியான வரிகள் எப்படி கிடைக்கிறது இவர்களுக்கு மட்டும்.

    Blog-ல் இருக்கும் போட்டோவை பார்த்தால் நம்பும்படியாக ???? இல்லை.

    .

    ReplyDelete
  2. சங்கர் உன் பின்னுட்டங்களுக்கு நன்றி.

    ||மழையினால் ஆன ஞாபங்கங்கள் எப்போதும் அதே ஈரப்பதத்துடன் நம் மனதில் ஏதோ மூலையில் தங்கிவிடுகிகறது. மழை ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் மறக்க முடியாத ஞாபகங்களை விட்டு செல்கிறது . ||
    ஆம். ஒட்டிலோ கூரையிலோ இருந்து வழியும் தண்ணீரை கைகளில் என்றோ ஒருநாள் ஏந்தி இருக்க கூடும் எல்லோரும்....

    அதே மழையை எப்போடிஎல்லாம் திட்ட முடியுமோ அப்படி எல்லாம் திட்டியும் இருப்போம்... பின்னே இருக்கும் ஒரு ஞாயிற்றில் ட்யுசண் நேரமெல்லாம் போக எஞ்சி இருக்கும் ஐந்து மணிநேரமும் விடாமல் பெய்தபடி இருந்தால் கொவம்வரதா என்ன ...???

    || நம்பும்படியாக ???? ||
    நீ ஏன் ஒரு தலைப்பு தரக்கூடாது எனக்கு? எழுதிதான் பார்ப்போமே உன் தலைப்புக்கு..? எந்த தலைப்புக்கும் பொருத்தமாக போட்டோ கிடைத்துவிடுகிறது கூகிள் தயவால்...

    "ரெயின்" என்று கிளிக்கிய நொடியில், இரண்டாவது பக்கத்திலோ... முன்றாவது பக்கத்திலோ கிடைத்துவிட்டது... நான் போட்டிருந்த இருசுவருகும் இடையில் நாமிற்கான புகைப்படம்.......

    ப்லோக் ஓபன் செய்யும் எண்ணம் இல்லையோ உனக்கு?? ஓபன் செய்து தரட்டுமா?

    ReplyDelete
  3. படம் அருமை. கவிதையும் தான் நண்பரே..

    உலக சினிமா பற்றிய வலை காண வாருங்கள்.

    ReplyDelete
  4. நன்றி வண்ணத்துபூச்சியார்! உங்கள் ப்லோக் ஐ இன்று தான் முதலில் பார்த்தேன், சிறிது காலத்தில் விமர்சிப்பேன்!

    ReplyDelete

Reactions